Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
R.Tharaniya / 2025 ஜூலை 02 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்போன் இல்லாத நபர்களே இல்லை என சொல்லும் அளவுக்கு அனைவருக்கும் மத்தியிலும் மொபைல் போன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
அதில் ஸ்மார்ட்போன்கள் வந்த பிறகு பேசுவதற்கு மட்டும் இன்றி பொழுதுபோக்கு சாதனமாகவும் செல்போன்கள் மாறிவிட்டன.இன்றைய உலகம் இணையதளத்துக்குள்ளேயே மூழ்கிக் கிடக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.
அதன் வாயிலாக புதுப்புது தளங்களும், செயலிகளும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. முக்கியமாக பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் பயனர்களை கவரும் விதமாக புது புது அப்டேட்களை கொடுத்து வருகிறது.
குறிப்பாக, உலகின் முன்னணி சமூக வலைதள செயலிகளில் ஒன்றாக இன்ஸ்டகிராம் உள்ளது. பயனர்கள் பலரும் தங்களுடைய ரீல்ஸ்களைப் பதிவிட்டு லைக்குகளைப் பெற்று வருகின்றனர்.
இன்ஸ்டகிராம் தனது போட்டியை சமாளிக்கும் விதமாக பயனர்களுக்கு அவ்வப்போது புது அப்டேட்களை வழங்கி வருகிறது.அந்த வகையில், தற்போது இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் ரீஸ்டைல் வித் மெடா ஏஐ - என்ற வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த வசதி மூலம் புகைப்படத்தை தேர்வு செய்துவிட்டு அதில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களை டைப் செய்தால் சில வினாடிகளில் ஏஐ புகைப்படம் தயாராகிவிடும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago