2021 ஜூன் 16, புதன்கிழமை

எலிமென்ட்ஸ் எனும் ஆப் இந்தியாவில் அறிமுகம்

Editorial   / 2020 ஜூலை 06 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

டிக்டாக், ஷேர் இட், யூசி பிரவுசர், ஹலோ ஆப் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதிப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் புதிய எலிமென்ட்ஸ் (Elyments) ஆப் எனும் சோஷியல் மீடியா ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக இது சொந்தநாட்டில் உருவாக்கப்பட்டுள்ளதால் அதிக வரவேறப்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய ஆப் வசதி 100 சதவிகிதம் உள்நாட்டிலேயே உள்ளது மற்றும் 1,000 க்கும் மேற்பட்டஐ.டி தொழில் வல்லுநர்களால் உருவாக்கப்பட்டது. இந்த எலிமென்ட்ஸ் ஆப் வசதி கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது.

எலிமென்ட்ஸ் என்பது பல சோஷியல் மீடியா ஆப்களின் அம்சங்களை ஒரே தளமாக இணைக்கும் ஒரு சமூக ஊடக பயன்பாடுஆகும். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இன்ஸ்டன்ட் மெசெஞ்சர் ஆப் மற்றும் வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான டூல்கள் போன்ற டூல்களை ஒன்றாக இணைக்கும் ஒரு சிறந்த ஆப் வசதி ஆகும்.

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட எலிமென்ட்ஸ் ஆப் வசதியானது ப்ரைவஸி மீது அதாவது தனியுரிமை மீது அதிக கவனம் செலுத்துகிறது. வாடிக்கையாளர்களின் ப்ரைவஸி மீது கவனம் வைத்து எலிமெண்ட்ஸ் கட்டப்பட்டுள்ளது. நாட்டின் சிறந்த தனியுரிமை வல்லுநர்கள் இந்த ஆப்பின் தயாரிப்பு வடிவமைப்பை வழிநடத்தி வருகின்றனர்.

வாடிக்கையாளர்களின் தகவல்கள் மட்டுமே இதில் சேமிக்கப்படும், ஒருபோதும் மூன்றாம் தரப்பினருடன்,பயனரின் வெளிப்படையான அனுமதியின்றி பகிரப்படாது என்று கூறப்பட்டுள்ளது.

மற்ற நாடுகளில் இருக்கும் ஏராளமான சமூக ஊடக ஆப்கள் தனியுரிமையின் பல்வேறு குறைபாடுகளை சந்திக்கும் இந்நேரத்தில் இதுபோன்ற எலிமென்ட்ஸ் ஆப் ப்ரைவஸியை பிரதானமாக கொண்டு வெளிவந்துள்ளது, வரவேற்கத்தக்கது.

வெளிவந்த தகவலின் அடிப்படையில் எட்டுக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் இந்த எலிமென்ட்ஸ் ஆப் வசதியைப் பயன்படுத்த முடியும். பின்பு 1000-க்கும் மேறப்டவர்களால் இந்த ஆப் சோதனை செய்யப்பட்டுள்ளது. இப்போது 200,000 க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே பதிவிறக்கம் செய்து இந்த ஆப்பை பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .