Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 செப்டெம்பர் 14, சனிக்கிழமை
Freelancer / 2024 மே 15 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூரிய வெடிப்பு தொடர்பாக ஆதித்யா எல் வன் எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, ஆதித்யா எல் வன் என்ற விண்கலத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விண்ணில் ஏவியது.
புவியில் இருந்து 15 இலட்சம் கிலோ மீற்றர் தூரத்தில் நிலை நிறுத்தப்பட்ட இந்த விண்கலம், சூரியனை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.
இது தொடர்பான தரவுகளையும் அவ்வப்போது இஸ்ரோவுக்கு அது அனுப்பி வருகிறது.
அதன்படி, கடந்த 11ஆம் நாள் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பை பதிவு செய்த ஆதித்யா எல் வன், இஸ்ரோவுக்கு அதன் தரவுகளை அனுப்பி வைத்தது. இந்தத் தரவுகளில் உள்ள புகைப்படங்களை இஸ்ரோ தனது வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
மேலும், சூரிய வெடிப்பு என்பது சூரியனில் நடைபெறும் வேதியியல் மாற்றம் காரணமாக ஒரு பகுதியில் குமிழி போன்று உருவாகி வெடிக்கும் நிகழ்வு. இது தொடர்பான ஆதித்யா விண்கலம் கொடுத்த தரவுகள் மூலம் இதற்கான முழுமையான காரணத்தைக் கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago