2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

மகனின் பப்ஜி ஆசையால் பணத்தை இழந்த தந்தை

Editorial   / 2020 ஜூலை 06 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பஞ்சாப் மாநிலத்தில் இணைய வகுப்பு இருப்பதாகக் கூறி பெற்றோரின் அலைபேசியை பயன்படுத்தி வந்த மகன் ஒருவர் பப்ஜி விளையாட்டை அப்கிரேட் செய்ய மட்டும் 16 இலட்சம் இந்திய ரூபாய் செலவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

17 வயது சிறுவன் ஒருவர் தனது தாயிடம் தினமும் இணைய வகுப்புகள் இருப்பதாகக் கூறி பல மணி நேரம் ஸ்மார்போனில் நேரம் செலவழித்து வந்துள்ளார். 

வங்கி ஊழியரான தந்தைக்கு தனது வங்கிக் கணக்கில் இருந்து மாத ஸ்டேட்மண்ட் வந்துள்ளது. அதில் 16 இலட்சம் ரூபாய் பணத்தை பப்ஜி கேமை அப்கிரேட் செய்ய சிறுவன் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. 

இதனால் அதிர்ந்த தந்தை, மகனிடம் விசாரித்துள்ளார். அப்போது, தினமும் பல மணி நேரம் இணைய வகுப்பு இருப்பதாக பொய்க் கூறி பப்ஜி விளையாடியதாக தெரிவித்துள்ளார்.

அதோடு கேமை அப்கிரேட் செய்ய வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை பயப்படுத்தியதாகவும், தனது நண்பர்கள் பலருக்கும் கேம் அப்கிரேட் செய்து கொடுத்ததாகவும் கூறியுள்ளார். 

மகனின் பதிலை அடுத்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்ற தந்தைக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது.பிளே ஸ்டோரில் அல்லது கேம்களை அப்கிரேட் செய்ய பயன்படுத்திய பணத்தை திரும்பப் பெற முடியாது என்றும், சிறுவனை இனி இதுபோன்ற தவறுகளை செய்யாமல் பார்த்துக் கொள்ளும் படியும் காவல்துறையினர் அறிவுரை வழங்கி அனுப்பியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .