Freelancer / 2022 பெப்ரவரி 08 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாட்ஸ்ஆப்பிற்கு இணையாக ஃபேஸ்புக் மெசேஞ்சரில்புதிய சேவைகள் சமீப காலமாக இணைக்கப்பட்டு வருகின்றன.
ஆடியோ, விடியோ தொலைப்பேசி அழைப்பு வசதிகள் மெசேஞ்சரில் கடந்த ஆண்டு சேர்க்கப்பட்டன.
வாட்ஸ்ஆப்பில் உள்ள தானியங்கி தகவல் அழியும் சேவையைப் போல் மெசேஞ்சரிலும் இந்த சேவை இணைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது நாம் ஒருவருக்கு அனுப்பும் தானாக அழியும் தகவலை அவர் ‘ஸ்கீரின் ஷாட்’ எடுத்தால், அதனை எமக்கு குறுந்தகவலாக எச்சரிக்கை செய்யும் புதிய சேவையை தற்போது மெசேஞ்சர் வழங்குகின்றது.
இந்தச் சேவையைப் செயற்படுத்த மெசேஞ்சரில் உள்ள ‘சீக்ரேட் கான்வா்ஷேசன்’ உள்ளே சென்று- ‘டிஸ்அப்பியரிங் மெசேஜஸ்’ என்பதை தேரிவு செய்ய வேண்டும்.
இதன் மூலம் தகவல் பரிமாற்றம் பாதுகாப்பாகவும், அனுப்பிய தகவலில் வெளிப்படைத் தன்மையும் இருக்கும் என்று ஃபேஸ்புக் நிறுவனமான மெட்டா தெரிவித்துள்ளது.
மேலும் தற்போது மெசேஞ்சரில், வாட்ஸ்ஆப்பில் இருப்பதைப்போல் குறிப்பிட்ட தகவலைத் தேரிவு செய்து பதிலளிக்கும் வசதியும், மற்றவர்கள் பதிலளிப்பதற்காகப் பதிவு செய்து கொண்டிருப்பதைத் தெரிந்து கொள்ளவும் முடியும்.
அத்தோடு அனுப்பப்பட்ட தகவலை சேமித்து வைத்துக் கொள்ளவும், விடியோக்களை அனுப்புவதற்கு முன்பு எடிட் செய்து கொள்ளவும் பல புதிய சேவைகளை ஃபேஸ்புக் மெசேஞ்சா் அறிமுகம் செய்துள்ளது.
30 minute ago
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
38 minute ago
2 hours ago