2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

பயனாளர்கள் தரவுகளை கூகுள் திருடியதா.? ரூ.36,500 கோடி அபராதம்?

J.A. George   / 2021 மார்ச் 16 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

incognito எனப்படும் மறைநிலை வெப் பிரவுசிங் நடத்திய 3 கூகுள் பயனாளர்களின் தரவுகளை திருடிய குற்றத்திற்காக, கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட்டுக்கு, அமெரிக்காவில் சுமார் 36 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

கூகுள் நிறுவனம் தனது பயனாளர்களின் தரவுகளை பரவலாக திருடுகிறது என்றும் அதிலும் கூகுள் குரோமில் உள்ள மறைநிலை மோட் வாயிலாக வெப்பிரவுசிங் நடத்துபவர்களின் தரவுகளையும் திருடுகிறது என கடந்த ஜூனில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது.

இதற்காக கூகுள் அலனாட்டிக்ஸ், குகூள் அட் மேனேஜர், பிளக்-இன்கள் மற்றும் மொபைல் செயலிகளை கூகுள் பயன்படுத்தவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இது தனிநபர் ரகசியம் காக்கும் கொள்கைக்கு எதிரானது என்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளதால் இந்த அபராதம் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .