2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

பறக்கும் பைக்

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 28 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள  ஹோவர் பைக் (hoverbike ) எனும் பறக்கும் மோட்டார் சைக்கிள் பார்வையாளர்களைப் பிரமிப்பூட்டி வருகின்றது.

A.L.I. Technologies என்ற நிறுவனமே X Turismo லிமிடெட் எடிஷன் என்ற இப்புதிய வகை மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி உள்ளது.

 விலையானது 680000 அமெரிக்க டொலர்கள் ( இலங்கை மதிப்பில் சுமார் 13,72,57,388 ரூபா ) எனத் தெரிவிக்கப்படுகின்றது.

 இதன் மூலம் வானில் 40 நிமிடங்களுக்கு 100 கிலோமீற்றர் வேகம் வரை பறக்க முடியும் எனவும், வழக்கமாக இரு சக்கர வாகனங்களில் பொருத்தப்படும் எஞ்சினுடன் கூடுதலாக பட்டரியில் இயங்கும் 4 மோட்டர்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இம் மோட்டார் சைக்கிளை மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற பேரிடர் காலங்களில் மக்களை மீட்க பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .