2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

புதிய ஸ்மார்ட்வொட்சை அறிமுகம் செய்யும் பேஸ்புக்

Ilango Bharathy   / 2021 ஜூன் 14 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள நிறுவனமாக பேஸ்புக் நிறுவனம் காணப்டுகின்றது.

அந்தவகையில்  பேஸ்புக் நிறுவனமானது ஸ்மார்ட்வொட்ச் பிரியர்களைக் கருத்தில் கொண்டு புதிய அவதாரமொன்றை எடுத்துள்ளது.

இரண்டு கெமராக்களுடன்  கூடிய புதிய ஸ்மார்ட்வொட்சை பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாகவும், இதன் மூலம் எடுக்கப்படும் படங்களை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் நேரடியாக பகிர முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவ் ஸ்மார்ட்வொட்சில் செய்திகளை அனுப்பவும், பெறவும் முடியுமெனவும் அடுத்த வருடம் (2022) இதனை சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .