Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2012 ஜனவரி 17 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இணைய கலைக்களஞ்சியமான விக்கிபீடியா இணையத்தளத்தை 24 மணித்தியாலங்களுக்கு முடக்கிவைக்கப் போவதாக அந்த இணையத்தளத்தின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றினால் முன்மொழியப்பட்டு சட்டமாக்க முயற்சிக்கப்படும் இணைய திருட்டு தடுப்புச் சட்டம் (SOPA -சோபா) மற்றும் புலமைச்சொத்து பாதுகாப்பு சட்டம் ((PIPA -பிபா) ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே விக்கிபீடியாவின் ஆங்கில இணையத்தளத்தை இடைநிறுத்தி வைக்கப்போவதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன்படி, ஜனவரி 18 ஆம் திகதி புதன்கிழமை,( இலங்கை நேரப்படி காலை 10.30 மணிமுதல் ) 24 மணித்தியாலங்கள் விக்கிபீடியாவின் ஆங்கில இணையத்தளம் இயங்கமாட்டாது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுவரும் மேற்படி சட்டமூலங்களானவை பிற இணையத்தளங்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள் ஆகியவற்றின் எழுத்துமூல ஆக்கங்கள், மட்டும் வீடியோ முதலான உள்ளடக்கங்களை சட்டவிரோதமாக வெளியிடுவது, மோசமான வகையில் இயங்கும் இணையத்தளங்களுக்கு வருமானம் கிடைப்பதை தடுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டதென கூறப்படுகிறது.
ஆக்கங்களை திருடுவதில் சம்பந்தப்பட்ட இணையத்தளங்களை முடக்குவதற்கு அமெரிக்க அரசாங்கமும் ஆக்கங்களின் உரிமையாளர்களும் நீதிமன்றத்தை கோரும் அதிகாரத்தை இச்சட்டங்கள் அளிக்கும்.
எனினும் இச்சட்டமூலங்கள் கருத்துச் சுதந்திரத்தை பாதிக்கின்றன என எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.
விக்கிபீடியாவின் இணைய ஸ்தாபகரான ஜிம்மி வேல்ஸ் இது தொடர்பாக கூறுகையில், 'இந்த உத்தேச சட்டங்கள் அமெரிக்காவிலும் வெளிநாடுகளிலும் கருத்துச் சுதந்திரத்தை ஆபத்துக்குள்ளாக்குகிறது. அத்துடன் உலகில் இணைய தணிக்கைக்கான அச்சுறுத்தும் முன்னுதாரமாகவும் அமைகின்றது' எனக் கூறியுள்ளார்.
282 மொழிகளில் இயங்கும் விக்கிபீடியாவின் ஆங்கில இணையத்தளத்தை தினமும் 25 மில்லியன்பேர் பார்வையிடுவதாக தெரிவிக்கப்படுகிறது. விக்கிபீடியா கலைக்களஞ்சியத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்களால் பங்களிப்புச் செய்யப்பட்ட 20 மில்லியன் ஆக்கங்கள் உள்ளன.
இச்சட்டமூலங்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டாலும் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் வீட்டோ அதிகாரத்தின் மூலம் அவை இரத்துச் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை விடுத்த அறிக்கையொன்றில், 'வெளிநாட்டு இணையத்தளங்களால் மேற்கொள்ளப்படும் இணையத்திருட்டுகள் பாரதூரமான பிரச்சினையாக உள்ளதென நாம் நம்பும் அதேவேளை, கருத்துச்சுதந்திரத்தை குறைக்கும், இணைய பாதுகாப்பு அச்சுறுத்தலை அதிகரிக்கும், அல்லது சுறுசுறுப்பான, புத்தாக்கமான உலக இணையத்திற்கு பங்கம் ஏற்படுத்தும் சட்டங்களுக்கு நாம் ஆதரவளிக்க மாட்டோம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
ரெடிட் போன்ற சில சமூக இணையத்தளங்களும் இந்த பகிஷ்கரிப்பில் பங்குபற்றுகின்றன. கூகுள், பேஸ்புக், ட்விட்டர் போன்ற முன்னிலை இணையத்தளங்களும் இச்சட்டமூலங்களை எதிர்க்கின்றன. எனினும் டுவிட்டர் இணையத்தளம் இந்த பகிஷ்கரிப்பில் பங்குபற்ற மறுத்துள்ளது.
Kethis Wednesday, 18 January 2012 12:13 AM
விக்கிபீடியா இயங்காவிட்டால் நம்ம பசங்களுக்கு கவலை இல்லை. பேஸ் புக் முடக்கப்படுமென்றால் துவண்டு விடுவார்கள்.
Reply : 0 0
உமாபதி Wednesday, 18 January 2012 04:01 AM
ஆங்கில விக்கிப்பீடியா மாத்திரமே 1 நாள் இடைநிறுத்தப்படும். தமிழ் விக்கிப்பீடியா உட்ப்பட ஏனைய மொழி விக்கிப்பீடியா தொடர்ந்தும் இயங்கும்.
உமாபதி - விக்கிப்பீடியா நிர்வாகிகளுள் ஒருவர்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .