2024 செப்டெம்பர் 14, சனிக்கிழமை

AI மூலம் ஊழியர்கள் கண்காணிக்கும் நிறுவனம்

Editorial   / 2024 ஜூலை 24 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூப்பர் மார்க்கெட்டுக்கு வரும் வாடிக்கையாளர்களை ஊழியர்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பதை கண்காணிக்கும் வகையில் AI உதவியை ஒரு நிறுவனம்.  ஜப்பான் நாட்டில் உள்ள நிறுவனமே இவ்வாறு செய்துள்ளது.

2022-ன் இறுதியில் ஜெனரேட்டிவ் AI  குறித்த பேச்சு உலகளவில் வைரல் ஆனது. அதுவரை டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தும் மக்களிடையே AI இருந்தாலும் அது அதிக அளவில் கவனம் பெறாமல் இருந்தது என்று சொல்லலாம். ஓபன் AI நிறுவனத்தின் ‘சாட்-ஜிபிடி’ வரவு அதனை அப்படியே மாற்றியது.

இந்த ஜெனரேட்டிவ் AI பாட் டிஜிட்டல் பயனர்களின் அதீத வரவேற்பை பெற்றது. டெக்ஸ்ட், படம் போன்றவற்றை பயனர்கள் எளிதில் இதில் பெறலாம். கட்டுரை, கணினி புரோகிராமிங் என அனைத்தையும் இந்த பாட் எழுதி தரும். பாட்டிகள் போல கதையும் சொல்லும். நாம் ப்ராம்ப்ட் செய்யும் படத்தை உருவாக்கி கொடுக்கும் வல்லமையும் இதற்கு உள்ளது.

ஓபன் AI நிறுவனத்தை தொடர்ந்து அப்படியே கூகுள், மெட்டா, மைக்ரோசாப்ட் என அனைத்தும் இந்த ஜெனரேட்டிவ் AI பாட் கோதாவில் இறங்கின. அதன் விளைவாக இப்போது நமது செல்போனில், கணினியில், பயன்படுத்தும் செயலிகளில் என அனைத்து இடத்திலும் இடம் பிடித்துவிட்டது. அதற்கு சிறந்த உதாரணம் மெட்டா AI மற்றும் மைக்ரோசாப்ட் கோ-பைலட்.

‘நீ அறியாதது எதுவும் உண்டா?’, ‘எப்போது என்னுடன் தமிழில் பேசுவாய்?’ என பயனர்களை வேடிக்கையாக கேள்வி கேட்க செய்யும் அளவுக்கு இதன் அக்சஸ் உள்ளது. அந்த அளவுக்கு ஜெனரேட்டிவ் AI நம்முடன் இணைந்து விட்டது. இத்தகைய சூழலில் தான் ஜப்பான் நாட்டில் சூப்பர் மார்க்கெட் செயின் பிசினஸில் ஈடுபட்டு வரும் AEON என்ற நிறுவனம் AI தொழில்நுட்பத்தை தங்களது வணிகம் சார்ந்து பயன்படுத்துகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களிடம் தங்களது ஊழியர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை அந்நிறுவனம் கண்காணிக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .