S.Renuka / 2026 ஜனவரி 27 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் செல்போனில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்றிருப்பது வாட்ஸ்அப் தான்.
உலக முழுவதும் 3 பில்லியன் பேர் வாட்ஸ்அப்பை பயன்படுத்துகிறார்கள்.
ஆரம்பத்தில் குறுஞ்செய்தி மட்டும் அனுப்பும் வசதியுடன் அறிமுகமான வாட்ஸ்அப், நாளடைவில் புகைப்படங்கள், கோப்புகள், வீடியோ உள்ளிட்டவற்றையும் பகிரும் வசதியை அறிமுகம் செய்தது.
வாட்ஸ்அப்பில் குழு அரட்டை, ஸ்டேட்டஸ் என புதுப்புது வசதிகள் கொண்டு வரப்பட்டன. இதனால் எத்தனை நிறுவனங்கள் போட்டிக்கு வந்தாலும் வாட்ஸ்அப் தனக்கென ஒரு தனி இடத்தை டெக் உலகில் பிடித்துள்ளது.
வாட்ஸ்அப்பில் வருவாயை பெருக்கும் நடவடிக்கையாக விளம்பரங்கள் கொண்டு வரப்படும் என்று மெட்டா நிறுவனம் அறிவித்தது.
இதன்படி, ஸ்டேட்டஸ்களுக்கு நடுவே விளம்பரங்கள் தற்போது தோன்றி வருகின்றன. இது பயனர்களுக்கு சில நேரங்களில் இடையூறாக உள்ளது. எனவே, தற்போது விளம்பரம் இல்லா சேவையை பெறுவதற்காக புதிய கட்டண திட்டத்தை அறிமுகம் செய்ய மெட்டா திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக ஐரோப்பிய நாடுகளில் சுமார் €4 (1,690 இலங்கை ரூபாய்) விலையில் இது அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
11 minute ago
31 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
31 minute ago
2 hours ago