Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 மார்ச் 08 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேரள மாநிலம், நாட்டின் முதலாவது ரோபோ ஆசிரியரை அறிமுகம் செய்துள்ளது.
நாளுக்கு நாள் தொழில் நுட்பத்தின் அதீத வளர்ச்சி அதிகரித்துக் கொண்டு உள்ளது. அதிலும் சமீப காலமாக செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி என்பது மனிதர்களின் வேலையையே பறித்து விடுமோ என்ற ஐயத்தையும் ஏற்படுத்தும் அளவிற்கு வளர்ச்சி கண்டு வருகிறது.
சினிமா துறை, பத்திரிக்கை துறை, தொழில் துறை போன்றவற்றில் எல்லாம் தடம் பதிக்க ஆரம்பித்துள்ள VI தற்பொழுது கல்விக்கூடத்திலும் நுழைந்துள்ளது. அண்மையில் அமெரிக்காவில் 18 ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை செயற்கை நுண்ணறிவு (AI) பேசவைக்க உதவியுள்ளது. இது மருத்துவ துறையில் மிகப் பெரும் அதிசயமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த வகையில் இன்னொரு புது முயற்சியாக நாட்டின் முதல் செயற்கை நுண்ணறிவு ஆசிரியையாக ஐரிஸ் என்பவரை அறிமுகம் செய்துள்ளது கேரளா மாநிலம்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள KTC மேல்நிலைப்பள்ளியில் செயற்கை நுண்ணறிவு மூலம் ஆசிரியர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.
மேக்கர்லேஸ் எடுடெக் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆசிரியை உருவாக்கப்பட்டுள்ளார். இந்த AI ஆசிரியர் மூன்று மொழிகளை பேசும் மற்றும் சிக்கலான கேள்விகளை சமாளிக்கும் திறனையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளார்.
இதனை உருவாக்கிய தொழில்நுட்ப நிறுவனம் தனது சமுக வலைதளத்தில் AI ஆசிரியர் பற்றிய ஒரு வீடியோ பதிவை பகிர்ந்துள்ளது. தற்போது இந்த காணொளியானது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
ஐரிஸின் தனிப்பட்ட குரல் உதவி, கையாளுதல் திறன்கள் மற்றும் மாணவர்களுக்குச் சுலபமாகக் கற்பித்தல் ஆகிய தனிபட்ட திறமைகளுடன் இந்த செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் நகர்வை செயல்படுத்த சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இத்தனை திறன்களுடன் உருவாக்கப்பட்டுள்ள AI தொழில்நுட்பமானது நிச்சயம் கல்வித்துறையில் மாற்றங்கள் பலவற்றை நிகழ்த்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. S
51 minute ago
4 hours ago
18 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
4 hours ago
18 Oct 2025