2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

ரேடியோ அலைகள் மூலம் சக்தி பெறும் நுண் chip

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தகவல்களைப் பரிமாறிக் கொள்ளப் பயன்படும், ரேடியோ அலைகள் மூலம் சக்தியைப்    பெறும் நுண்ணிய உணரி ஒன்றை நெதர்லாந்து விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

இந்த உணரிகள் மூலம் நுண்ணிய பொருட்களினூடாக தகவல்களை பரிமாறும் தொழிற்துறை முன்னேற்றமடையும் என இந்தோவன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்பநிலை, ஒளி, காற்று மாசடைதல் என்பவற்றை கண்காணிக்கும் மேற்படி நுண்ணிய chipகளானவை, நகரங்களிலும் ஸ்மார்ட் வீடுகளிலும் அலுவலகங்களிலும் பயன்படுத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

மின்கலம் இல்லாமலே இயங்குதல் இந்த வகையான உணரிகளின் மிகப் பெரிய அனுகூலமாக காணப்படுகிறது.

தயாரிக்கப்பட்ட மேற்படி உணரியானது பிரதானமாக வெப்பநிலையைக் கண்காணிப்பதற்கே உருவாக்கப்பட்டுள்ளது எனவும், ஆனால் இதே வகையாக ஒளி, நர்வுகள், ஈரப்பதன் ஆகிவற்றைக் கண்காணிக்கும் உணரிகளை தயாரிக்க முடியும் என மேற்படி உணரியைத் தயாரித்த அணியின் முன்னணி ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பேராசிரியர் பீற்றர் பல்டஸ் தெரிவித்தார்.

இந்த உணரியானது இரண்டு சதுர மில்லிமீற்றரும் அளவானதும் 1.6 மில்லி கிராம் எடையைக் கொண்டதுமே ஆகும்.

இந்த உணரியானது  ஒரு அன்ரனாவைக் கொண்டிருப்பதுடன், அதன் மூலம் கம்பியில்லாத routerஇன் மூலம் சக்தியைப் பெற்று சக்தியைச் சேமிக்கும். தேவையானளவு சக்தியைப் பெற்றவுடன் வெப்பநிலையைக் கண்காணித்து routerக்கு சமிக்ஞையை அனுப்பும்.

தற்போது இந்த உணரி கண்காணிக்கக் கூடிய சுற்று வட்டம் 2.5 சென்றிமீற்றராக உள்ளபோதும் இந்த எல்லையை ஒரு மீற்றர் வரை நீடிக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X