Freelancer / 2022 ஜூன் 11 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கிலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் வெள்ளிக்கிழமை(10) இரவு கதவு திறத்தவுடன் ஆரம்பமாகியது.

கதவு திறத்தல் சடங்கு கிராங்குளம் கிராம மக்களாலும், சனிக்கிழமை பகற்சடங்கு குருக்கள்மடம் கிராமமக்களாலும், சனிக்கிழமை இரவுச் சடங்கு மாங்காடு கிராமமக்களாலும், ஞாயிற்றுக்கிழமை பகல் கல்யாணச் சடங்கு தேற்றாத்தீவு கிராம மக்களாலும், ஞாயிற்றுக்கிழமை இரவு பூரண கும்பச்சடங்கு செட்டிபாளையம் கிராம மக்களாலும், திங்கட்கிழமை பகற் சடங்கு களுதாவளை கிராம மக்களாலும், திங்கட்கிழமை பின்னிரவு திருக்குளிர்த்திச் சடங்கு களுதாவளை மக்களாலும் நடாத்தப்படவுள்ளன.

வருடாந்தம் மேற்படி ஆறு கிராம மக்களால் மிகவும் தொன்று தொட்டு இக்கண்ணகை அம்மன் ஆலயத்தில் சடங்குகள் இடம்பெற்று வருகின்றன. சிவஸ்ரீ.கு.தேவராசா தலைமையிலான கட்டாடியார் தலைமையில் சடங்குகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த இரண்டு வருடங்களாக இவ்வாலயத்தில் கொவிட் நிலமை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட மக்களைக் கொண்டு சடங்குகள் இடம்பெற்று வந்த நிலையில், இம்முறை அது தளர்த்தப்பட்டதனையடுத்து அதிகளவு பக்கதர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் சடங்கு காலத்தில் ஆலயத்தில் பாரம்பரிய முறைப்படி கண்ணகை அம்மன் வழங்குரை படித்தல் இடம்பெற்று வருகின்றமைகும் சிறப்பம்சமாகும்.
19 minute ago
39 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
39 minute ago
44 minute ago