2022 ஜூலை 04, திங்கட்கிழமை

இயந்திர படகில் கதிர்காமத்திற்கு யாத்திரை

Freelancer   / 2022 ஜூன் 20 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

( காரைதீவு  நிருபர் சகா)

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் கதிர்காம பாதயாத்திரை குழுவினர் நேற்று முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து, திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் செய்தனர்.

அதனைத்தொடர்ந்து, நேற்று மாலை கொக்கிளாயில் இருந்து இயந்திரப் படகுகள் மூலம் அவர்கள் புல்மோட்டை வந்திருந்தனர். 

மேலும், கடந்த 4 ஆம் திகதி யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பித்த இந்த யாத்திரை நேற்று 13 ஆவது தினமாக சிறப்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

கதிர்காம யாத்திரை பேரவையின் தலைவர் எஸ் .ஜெகராஜா தலைமையில், எண்பத்தி ஏழு அடியார்கள் வந்து கொண்டிருக்கின்றார்கள் .

நேற்றைய தினம் கொக்குளாய் முருகன் ஆலய நிர்வாகத்தினர் எரிபொருள் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் அந்த இயந்திர படகுகளை கடற்படை உதவியோடு ஏற்படுத்திக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .