Freelancer / 2022 ஜூன் 28 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் தொன்மை வாய்ந்த கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாக திகழ்ந்துவரும் இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய வருடாந்த பெருவிழா (26) திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியிறக்கத்துடன் இனிதே நிறைவடைந்துள்ளது.

கடந்த (17) ஆலய பங்குத்தந்தை அருட்பணி அலெக்ஸ் றொபர்ட் அடிகளார் தலைமையில், பங்குமக்கள் சூழ கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய வருடாந்த திருவிழாவில் நவநாள் காலங்களில் தினமும் திருச்செபமாலையும், திருவிழா திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டு, கடந்த (25) சனிக்கிழமை நற்கருணை எழுந்தேற்றமும், திருச்சொரூப பவனியும் இடம்பெற்றுள்ளதுடன், மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, அத்திருப்பலியில் முதல் நன்மை, உறுதிப்பூசுதல் ஆகிய அருளடையாளங்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து (26) திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு இயேசு சபைத்துறவி அருட்பணி சுவைக்கின் ரொசான் அடிகளார் தலைமையில், பெருவிழா கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, கொடியிறக்கத்துடன் இவ்வாண்டிற்கான திருவிழா இனிதே நிறைவடைந்திருந்துள்ளது.

பெருவிழா கூட்டுத் திருப்பலியில் அருட்தந்தையர்களும், அருட்சகோதரிகள், பொது நிலையினர், அதிகளவிலான பங்கு மக்கள் உட்பட இறை விசுவாசிகளும், வெளிப் பங்கு மக்களும் கலந்துகொண்டு திருவிழா நிகழ்வை சிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

22 minute ago
23 minute ago
33 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
23 minute ago
33 minute ago
35 minute ago