2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

பிரதமரின் பிறந்தநாளில் விசேட பூஜை

Princiya Dixci   / 2020 நவம்பர் 18 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா,எம்.என்.எம்.அப்ராஸ்

நாட்டின் பிரதமரும் புத்தசாசன, சமய விவகார, கலாசார அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவின் 75ஆவது பிறந்தநாளையொட்டி, அம்பாறை - மாணிக்கப் பிள்ளையார்  கோவிலில், பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.நகுலேஸ்வர சர்மா தலைமையில் இன்று (18) விசேட பூஜை நடைபெற்றது. 

அத்துடன், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நாடு மீள்வதற்காகவும் பொதுமக்களுக்கு ஆசி வேண்டியும் விசேட மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமமும் இதன்போது நடைபெற்றது. 

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த வழிபாட்டில், அம்பாறை மாவட்டச் செயலாளர்  டி.எம்.எல்.பண்டாரநாயக்க, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன்,  கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் வ.கருணைநாதன், இராணுவ, பொலிஸ் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .