Editorial / 2021 ஏப்ரல் 20 , பி.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு - மாமூலை, மாகா விஷ்ணு ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று (20) மிகவும் சிறப்புற நடைபெற்றது.
ஆலய பிரதம குருக்களான, கிருபாகரக் குருக்களால் அதிகாலையிலேயே மகாவிஷ்ணுவுக்கு விசேட அபிஷேக, பூசைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனையடுத்து மகா விஷ்ணு பெருமான், பூ லட்சுமி, மகா லட்சுமி சமேதராக உள்வீதி வலம் வந்தார்.
அதனைத் தொடர்ந்து தேரிலேறி வெளிவீதி வலம்வந்த மகாவிஷ்ணு பெருமான், பூலட்சுமி, மகா லட்சுமி சமேதராக காட்சியளித்து பக்த அடியவர்களுக்கு அருளாசி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த விசேட பூசை வழிபாடுகளில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான சின்னராசா லோகேஸ்வரன், கனகையா தவராசா ஆகியோருடன் பெருந்திரளான பக்தர்களும் கலந்துகொண்டிருந்தனர். (விஜயரத்தினம் சரவணன்)








28 minute ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
21 Dec 2025