2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

கோரக்கர் அகோரமாரியம்மன் ஆலய தீமிதிப்பு…

Editorial   / 2021 ஜூலை 23 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்றுப் பிரசித்திபெற்ற  சம்மாந்துறை கோரக்கர் ஸ்ரீ அகோரமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு உற்சவம் இன்று (23) வெள்ளிக்கிழமை சிறப்பாக  நடைபெற்றது.

நள்ளிரவில் தீமூட்டி அதிகாலையில் ஆலய பிரதமபூசகர் முருகேசு ஜெகநாதன்(ஆனைக்குட்டி) தலைமையில் தீமிப்பு வைபவம் நடைபெற்றது.

கொரோனா தொற்று காரணத்தினால் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களே கலந்துகொண்டனர். ஆலய நிருவாகத்தினர் மற்றும் பக்தர்கள், சுகாதாரமுறைப்படி கலந்துகொண்டனர்.

கடந்த 13ஆம் திகதி காரைதீவில் கடல்நீர் எடுத்துவந்து  திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமான வருடாந்த உற்சவம் தீமிதிப்புடன் நிறைவடைந்தது.

அதன் பின்னர், சர்க்கரைஅமுது படைத்தல் முதல் சாட்டையடித்தல் வரையிலான மரபுரீதியான சடங்குகள் இடம்பெற்றன்.  ஆலய செயலாளர் கே.அழகுராஜா வைபவத்தை நெறிப்படுத்தி நன்றியுரையாற்றினார். (படங்களும் தகவலும் வி.ரி.சகாதேவராஜா) 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X