Editorial / 2023 பெப்ரவரி 19 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிவபூமி மன்னார் மாதோட்டத்தின் பாலாவிக்கரையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் மிகவும் பழமை வாய்ந்ததும், பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீச்சரத்தின் சிவராத்திரி சிறப்பாக நடைபெற்றது.
கௌரி அம்பாள் உடனுறை கேதீச்சரநாதருக்கு 2023 வருடத்திற்கான மஹா சிவராத்திரி திருக்கேதீச்சர ஆலயத்தில் சனிக்கிழமை (18) காலை 5 மணிக்கு விசேட பூஜை வழிபாடுகள் அபிஷேகங்களுடன் ஆரம்பமாகியது.
பாவங்கள் போக்கும் பாலாவியில் நீராடி ஈசனுக்குத் தீர்த்தம் எடுப்பதற்காக நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் சுமார் 7 .லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.
காலை 8.மணி தொடக்கம் மகாலிங்க பெருமானுக்கு தீர்த்தக் காவடி எடுக்கப்பட்டது.
அத்துடன் மாலை 3 மணி முதல் விஷேட அபிஷேகமும் 4.30 மணிக்கு மகா பிரதோஷ கால பூஜையும் இதனைத் தொடர்ந்து ஆறு சாமப்பூசை அபிஷேகங்களும் அர்ச்சனை வழிபாடுகளும் நடைபெற்று மறுநாள் விசேட வசந்த மண்டப அலங்கார பூஜையைத் தொடர்ந்து பாலாவியில் எழுந்தருளி இருக்கும் ஈசனுக்கு தீர்த்த உற்சவம் நடைபெறுவதற்கான எற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விஷேட நிகழ்வாக அன்னதானம் தாகசாந்தி வழங்கும் நிகழ்வு சிறப்பு சமய சொற்பொழிவுகள் கலை நிகழ்வுகள் பாராயணம் ஓதுதல் போன்றவையும் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
(ரொசேரியன் லம்பெட்)








15 minute ago
23 minute ago
32 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
23 minute ago
32 minute ago
1 hours ago