2025 மே 19, திங்கட்கிழமை

200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோட்டை வைரவர் ஆலயம் கும்பாபிஷேகம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 26 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


200 ஆண்டுகள் பழமை வாய்ந்த யாழ். கோட்டை வாளகத்தினுள் உள்ள வைரவர் ஆலயம் தொல்லியல் திணைக்களத்தினால் புனரமைப்புச் செய்யப்பட்டு இன்று திங்கட்கிழமை கும்பாபிஷேகம் இடம்பெற்றுள்ளது.

தோல்லியல் திணைக்களத்தின் உத்தியோகஸ்தர்களின் நிதிப்பங்களிப்புடன் அந்தக்கோயில் புனரமைக்கப்ட்டு இன்று கிரியைகள் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசியிரியர் புஸ்பரட்ணம் தெரிவிக்கையில் யாழ்ப்பாணத்த்தை ஒல்லாந்தர் ஆட்சி செய்த காலத்தில் இக் கோயில் அங்கு கடமையாற்றிய சேவகர்களாலும் சிறைக்கைதிகளாலும் வழிபாடு செய்யப்பட்டு வந்துள்ளது.

இது நீண்டகாலமாக சிதைவடைந்த இதனை புனரமைப்புச் செய்து வழிபாடு செய்யவேண்டும் என்ற எண்ணத்துடன் தொல்லியத் திணைக்களத்தின் உத்தியோகஸ்தர்களின் நிதியுதவியுடன் புனரமைக்கப்ட்டுள்ளதாக அவர் குறிப்பட்டார்.

இந்த நிகழ்வில் தொல்லியல் திணைக்களத்தின் வடபிராந்திய உதவிப்பணிப்பாளர் சோம திலக மற்றும் திணைக்களத்தின் உத்தியோகஸ்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X