2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பெரியகல்லாறு சித்திவிநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 06 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு, பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீசர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தின் புனராவர்தன பிரதிஸ்டா மகாகும்பாபிஷேகம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வியாறுவெனப் போற்றப்படும் பெரியகல்லாறு பகுதியில் சுமார் 400 வருடங்களுக்கு முன்னர் இவ்வாலயம் அமையப்பெற்றதாக வரலாறுகள் கூறுகின்றன. கதிர்காம யாத்திரிகர்கள் பண்டைய காலந்தொட்டு வணங்கிவரும் ஆலயமாகவும் தங்கிச்செல்லும் ஆலயமாகவும்; இவ்வாலயம் விளங்குகின்றது.  இவ்வாலயத்தில் கடந்த காலங்களில் பல்வேறு அற்புதங்கள் நிகழ்ந்ததுடன்,  நோய் தீர்க்கும் சக்தியையும் கொண்டதாக இவ்வாலயம் இருந்துவருகின்றது.

நேற்றுமுன்தினம் புதன்கிழமை இவ்வாலயத்தில் எண்ணெய்க்காப்பு சாத்தும் சடங்கு நடைபெற்றது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X