2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

செல்வச்சந்நிதி முருகனின் ரதபவனி

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 30 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த தேர்திருவிழா இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.

இன்று காலை ஆரம்பமான விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து முருகப்பெருமானின் ஆயுதமான வேல் மற்றும் விநாயகப்பெருமான் சகிதம் முருகன் வள்ளி தெய்வாணையுடன் உள் வீதிவலம் வந்த பின்னர் பிள்ளையார்ரதம், முருக ரதம், வேல்ரதம் ஆகிய மூன்று ரதங்களிலும் எழுந்தருளி அடியவர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்த திருவிழாவினைக் காண நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் சந்நிதியான் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X