2025 மே 19, திங்கட்கிழமை

'சித்திரை செவ்வாய் முளைக்கொட்டு'

Kanagaraj   / 2013 மே 01 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எம்.என்.எம். ஹிஜாஸ்


புத்தளம் மாவட்டத்தில் தழிழ் மக்கள் பரந்து வாழும் உடப்பு பிரதேசத்தில் 'சித்திரை செவ்வாய் முளைக்கொட்டு' நிகழ்வின் இறுதி நாளான இன்று புதன்கிழமை வெகு சிறப்பாக நிகழ்வுகள் இடம்பெற்றன.

தொன்று தொட்டு கலை, கலாசாரங்களை பேணி வரும் உடப்பு பிரதேசத்தில் சித்திரை செவ்வாய் நிகழ்வும் வம்சாவழியாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

கடந்த 22ம் திகதி நவதானியங்களினை முளைக்க வைப்பது மூலம் ஆரம்பிக்கப்பட்ட இவ் வழிப்பாட்டு தொடர்ந்து 10 நாட்களுக்கு நடைபெறும்.  10 வயதுக்குட்பட்ட கன்னிப்பெண்கள் காலையிலும் மாலையிலும் நவதானியங்களுக்கு  நீருற்றி பக்குவமாக வளர்த்து இறுதிநாளன்று படையல் செய்து முளைத்தானியங்களினை நீரில் கரைத்து விடுவார்கள்.

மழையினை வேண்டியும், நோய், பிணிகளிலிருந்து அம்மனிடம் பாதுகாப்பு கோரியே இவ் வழிப்பாடு நடைபெறுகின்றது.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X