2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஸ்ரீ ஜெகநாதரின் இரத பவனி

Kogilavani   / 2013 ஜூன் 03 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன், எஸ்.பாக்கியநாதன்


அகில இலங்கை கிருஸ்ண பக்தி கழகத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீ ஜெகநாதரின் இரத பவனி நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பு கல்லடி உப்போடை துளசி மண்டபத்தில் நடைபெற்றது..

திருகோணமலை மாவட்ட கிருஷ்ண பக்திக் கழக தலைவர்கள் ஸ்ரீ தாமோதரதாஸ் மற்றும் திருமதி சாந்திமதி தேவிதாஸ்  தலைமையில் இடம்பெற்ற இவ் இரத பவனி, கல்லடி உப்போடை பேச்சியம்மன் சித்தி விநாயகர் ஆலய பரிபாலன சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில், இந்தியாவைச் சேர்ந்த கிருஷ்ண பக்திக் கழக பக்தர்களும் இலங்கை கிருஷ்ண பக்தி கழக பக்தர்களும் கலந்து கொண்டனர்.
இதில் வட இந்திய பிருந்தாவனத்தைச் சேர்ந்த கிருஷ்ண பக்தர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வானது யாகம் மற்றும் பூசையுடன் ஆரம்பமாகி பின்னர் பாலா கௌரதாஸின்;; உரை நிகழ்த்தப்பட்டது.
அதன் பின்னர் ரத பவணி இடம்பெற்றது.

இப்பவணியானது துளசி மண்டபத்தில் இருந்து பழைய கல்முனை வீதியினூடாக சென்று கல்லடி மணிக்கூட்டுக் கோபுரத்தை வந்தடைந்து பின்னர் புதிய கல்முனை வீதியினூடாக மீண்டும் துளசி மண்டபத்தினை வந்தடைந்து.

பின்னர் மண்டபத்தில் கலைநிகழ்வுகளும் அன்னதானமும் இடம்பெற்றன.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .