2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

களுதாவளைப் பிள்ளையார் ஆலய மகா கும்பாபிசேகம்

Kogilavani   / 2013 ஜூன் 21 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு, களுதாவளைப் பிள்ளையார் ஆலய மகா கும்பாபிசேகம் இன்று வெள்ளிக்கிழமை காலை சிறப்பாக இடம்பெற்றது
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த இரண்டு தினங்களாக எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றதுடன்

இந்நிகழ்வில் பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து இன்று காலை களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலய பிரதம குருவும் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதமகுருவுமான சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் விசேட திரவிய யாகம், மஹா பூரணாகுதி, விசேட தீபாராதனை என்பன இடம்பெற்று கும்பாபிஷேகம் சிறப்பாக இடம்பெற்றது.

ஆலயத்தின் சுற்றுப்பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து ஆலயங்களுக்கும் ஒரே தடவையில் சிவாச்சாரியர்களினால் கும்பாபிஷேகம் நிகழ்த்தப்பட்டது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .