
-தேவ அச்சுதன்
வரலாற்று பெருமை, சிறப்பு மிக்க அம்மன் ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு கொத்துக்குளம் முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று சனிக்கிழமை காலை கோலாகலமாக இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்தின் நீண்ட வரலாற்றினையும் அற்புதங்களையும் கொண்ட ஆலயமாக கொத்துக்குளம் முத்துமாரியம்மன் ஆலயம் உள்ளது.
திங்கட்கிழமை ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் தினமும் சிறப்பு பூசைகள் இடம்பெற்றுவந்ததுடன் அம்மன் ஊர்வலமும் இடம்பெற்றுவந்தது.
அற்புதங்கள் கொண்ட ஆலயத்தின் வருடாந்த உற்சவமானது கடந்த ஏழு தினங்களாக சிறப்பாக இடம்பெற்றுவந்தது. நேற்று இரவு ஆலயத்தின் சப்புரத்திருவிழா சிறப்பாக இடம்பெற்றதுடன் வசந்த மண்டபத்தில் அமர்ந்துள்ள அம்மனுக்கு பூசைகள் இடம்பெற்றன.
இன்று காலை அம்மனுக்கு விசேட பூசைகள் இடம்பெற்றதுடன் தம்ப பூசை இடம்பெற்று வசந்த மண்டப பூசை இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து சுவாமி ஊர்வலமாக தேர் முட்டியடிக்கு கொண்டுவரப்பட்டு அங்கு விசேட பூசைகள் இடம்பெற்றன.
அதனைத்தொடர்ந்து ஆண்கள் ஒரு புறமாகவும் பெண்கள் ஒரு புறமாகவும் வடம் பிடிக்க தேரோட்டம் சிறப்பாக இடம்பெற்றது.