2021 ஜூலை 31, சனிக்கிழமை

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முத்தேர்த்திருவிழா

Kanagaraj   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.தியாகு

நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சித்ரா பௌர்ணமி முத்தேர்த்திருவிழா இன்று  செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்றது.

 பாரம்பரிய கலை கலாச்சார விசேட மேளக்கச்சேரி என்பனவும் இடம்பெற்றன.விநாயகர்,வள்ளிதேவசேனாசமேத முருகப் பெருமான்,ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆகிய தெய்வங்களின் முத்தேர்பவனியையும் இடம்பெற்றது.

 இதில் கலந்து கொண்ட பிரதி அமைச்சரும் பரிபாலன சபையின் ஆயுள் காப்பாளருமான  முத்துசிவலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினரும் பரிபாலன சபை தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன்,மாநகர முதல்வர் மகிந்த தொடம்பே கமகே,மாநகர சபை உறுப்பினரும் ஆயுள் காப்பாளருமான எல்.நேருஜி உட்பட ஆலய பரிபாலன சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .