2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சங்கமன்கண்டி பிள்ளையார் ஆலயத்தின் ஆடிப்பூரணை தீர்த்தோற்சவம்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 08 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.சுகிர்தகுமார் 


வரலாற்றுச் சிறப்புடைய சங்கமன்கண்டி பிள்ளையார் ஆலயத்தின் ஆடிப்பூரணை தீர்த்தோற்சவம் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது.

பத்தொன்பதாம் நூற்றாண்டு காலத்தில் திறந்த வெளிக்கோயிலாக தோற்றம் பெற்று அடர்ந்த வனப்பகுதியின் மத்தியில் மலைக்குன்றுகளின் இடையே இன்றும் இந்துக்களால் போற்றப்படும் ஆலயமா இவ் ஆலயம் சிறப்புடன் விளங்குகின்றது.

ஆடிப்பூரணையும், திருகோண திதியும் ஒன்றாய் வருகின்ற நாளில் வருடந்தோறும் நடைபெறும் தீர்த்தோற்சவம் இவ்வருடமும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

நாளை சனிக்கிழமை(9) இரவு இடம்பெறும் விசேட வழிபாடுகள், திருவிழாவோடும் ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெறும் தீர்த்தோற்சவத்துடனும் கிரியைகள் யாவும் நிறைவுறவுள்ளதாக ஆலய செயலாளரும் இந்துமாமன்ற தலைவருமான வே.சந்திரசேகரம் தெரிவித்தார்.

கிரியைகள் யாவற்றையும் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மு.கதிர்வேல் குருக்கள் நடத்த உள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .