2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரீதாந்தா முருகன் கோவில் உற்சவத்துக்கான பாதயாத்திரை

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 08 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்,எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு, புளியந்தீவு கல்லடித்தெரு பொதுமக்களால் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்ரீதந்தா முருகன் கோவில் உற்சவத்துக்கான புனித பாதயாத்திரை நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை  மட்டக்களப்பு புளியந்தீவு ஸ்ரீசித்தி விக்னேஸ்வரர் கோவிலிலிருந்து  ஆரம்பமானது.

இந்த பாதயாத்திரையானது புதூர், வவுணதீவு, வாழைக்காலை பிரதேசம் வழியாக ஸ்ரீதந்தா முருகன் கோவிலைச் சென்றடையவுள்ளது.

பின்னர் புளியந்தீவு ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி கோவில், ஸ்ரீதிரௌபதையம்மன் கோவில் ஆகியவற்றில் விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு யாத்திரைப் பயணம் தொடர்ந்து இடம்பெற்றது.

யாத்திரிகர்களுக்காக செல்லும் வழிகளில் இருக்கும் கோவில்களினால் தண்ணீர்ப்பந்தல்கள் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், பனிச்சையடி காளி கோவில் நிர்வாகத்தினரால் மதிய உணவும் பாவற்கொடிச்சேனை காளி கோவில் நிர்வாகத்தினரால் இரவு உணவும் வழங்கப்படவுள்ளன.

அத்துடன் பாவற்கொடிச்சேனை காளி கோவிலில் இரவு தங்குதல் இடம்பெற்று மீண்டும் நாளை காலை யாத்திரைப்பயணம் ஆரம்பமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .