2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தாந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கான தல யாத்திரை

Gavitha   / 2014 ஓகஸ்ட் 09 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


தாந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கான தல யாத்திரை கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு  நடராசா தலைமையில் கோட்டைக்கல்லாறு அம்பாரைவில் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து வெள்ளிக்கிழமை (08) ஆரம்பமாகியது.

இதன்போது பக்தர்களுக்கு களுவாஞ்சிகுடி அற்புதப்பிள்ளையார் ஆலயம், பட்டிருப்பு சித்தி விநாயகர் ஆலயம், பெரியபோரதீவு பத்திர காளியம்மன் ஆலயம், தும்பங்கேணி கண்ணகியம்மன் ஆலயம், திக்கோடை அம்பாறைப்பிள்ளையார் ஆலயம், போன்ற ஆலயங்களை வழிபாடு செய்து வெள்ளிக்கிழமை (08) இரவு வாழைக்காலைப் பிள்ளையார் ஆலயத்தில் தங்கி நின்று இன்று சனிக்கிழமை (09) அதிகாலை தாந்தாமலை  ஸ்ரீ முருகன் ஆலயத்தினை நோக்கிப புறப்படடனர்

இவ் யாத்திரையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இணைந்திருந்தனர். தல யாத்திரை செல்லும் பக்தர்களின் நலன் கருதி தாகசாந்தி நிகழ்வுகளும், அன்னதானங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இத்தலயாத்திரைக் குழுவின் ஏற்பாட்டாளர் த.ராயு தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .