2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

உகந்தைமலை முருகன் ஆலய தீர்;த்தோற்சவம்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 10 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.சுகிர்தகுமார்


இயற்கை எழில் கொஞ்சும் உகந்தைமலை முருகன் ஆலய வருடாந்த ஆடிப்பூரணை சமுத்திர தீர்த்தோற்சவம் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ இன்று(10) நடைபெற்றது.

முருகப்பெருமானும் வள்ளியும் கருத்தொருமித்து களித்திருந்த இத்திருத்தலத்தில் இந்துக்களும் பௌத்தர்களும் ஒருமனதாய் பக்தியுடன் வழிபட்டமை சமயப் புரிந்துணர்வின் வெளிப்பாடாக அமைந்தது.

ஆலய வண்ணக்கர் முத்துபண்டா சுரேந்திரராஜ் தலைமையில் நடைபெற்ற திருவிழாவின்  உற்சவகால கிரியைகள் யாவற்றையும் சிவஸ்ரீ க.கு.சீதாராம குருக்கள்;; நடாத்தி வைத்தார்.

கடந்த 27ஆம் திகதி கொடியேற்றதுடன் ஆரம்பமான இத்திருவிழாவில் மயில் திருவிழா, மலைத்திருவிழா, தேர்த்திருவிழா ஆகியவற்றுடன் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .