2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் திருச்சீட்டு எழுதும் நிகழ்வு

Thipaan   / 2014 ஓகஸ்ட் 11 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும்  19ஆம் திகதி கொயேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக ஆலய நிருவாகம் அறிவித்துள்ளது.

வருடம் தோறும்  ஆலய கொடியேற்றத்திற்கு முன்பாக திருச்சீட்டு எழுதும்    சம்பிரதாய நிகழ்வு இடம்பெறும்.

இவ்வருடத்திற்குரிய திருச்சீட்டு எழுதும் நிகழ்வு இவ்வாலயத்தின் வண்ணக்கர் பொ.செல்வக்குமார் தலைமையில்   ஞாயிற்றுக்கிழமை (10) ஆலய   வீதியிலுள்ள அரச மரத்தின்  கீழ் நடைபெற்றது.

திருச்சீட்டு என்பது  இவ்வாலய உற்சவகாலங்களில், திருவிழாக்களில் பாரம்பரியத்தின் அடிப்படையில்  உரிமையுடையவர்களுக்கு கடிதமூலமாக   அறிவிப்பதாகும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .