2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மடு அன்னையின் ஆவணித்திருவிழா

Super User   / 2014 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மடு அன்னையின் ஆவணித் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை (15) சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையின் தலைமையில், இலங்கை கருதினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஓய்வு பெற்ற கொழும்பு பேராயர் ஒஸ்வால்ட் கோமிஸ் ஆண்டகை, காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை, அநுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்ராடி ஆண்டகை ஆகியோர் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை (15) காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

மடு அன்னையின் ஆவணித்திருவிழா கடந்த 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அதனைத்தொடர்ந்து நவநாள் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டு வந்தன.

திருப்பலி ஒப்புக்கொடுப்பின் போது இத்தாலி ஆயர் மன்ற பிரதிநிதிகள், கத்தோலிக்க குருக்கள், அருட்சகோதரிகள் என சுமார் 200 பேர் வரை கலந்து கொண்டிருந்ததோடு அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடமாகாண அமைச்சர், வடமாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இம்முறை மடுத்திருவிழாவிற்கு நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் சுமார் 5 இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .