2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கிருஷ்ண ஜெயந்தி விழா

George   / 2014 ஓகஸ்ட் 16 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தின் வருடாந்த கிருஷ்ண ஜெயந்தி விழா எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு அன்று மாலை மாலை 5.00 மணியளவில் பூர்வாங்ககிரியை நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு உறியடிக்கும் நிகழ்வும் பின் வசந்த மண்டப பூஜையும் இடம்பெறவுள்ளது.

கிருஷ்ணன் பிள்ளைப் பருவத்தில் பால் தயிர் வெண்ணைய் முதலான பொருட்களை பானையில் வைக்கும் போது அவற்றை திருடி உண்பதையே கருப்பொருளாக கொண்டு, சிறார்கள் கிருஷ்ணர் வேடம் தரித்து நீர்தாறை விசிறல்களுக்கு மத்தியில் பால், தயிர், வெண்ணைய் என்பவற்றை கொண்ட உறிமுட்டியை உடைத்து உண்பதை, இந்நிகழ்வில் சிறுவர்களால் சித்தரித்து காட்டப்படவுள்ளது.

இதில் வெற்றி பெறும் சிறுவர்கள்  குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலய நிர்வாகத்தினரால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .