2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

6 அடி உயரம்,76 மி.மீற்றர் விட்டம் கொண்ட ஊதுபத்தி ஏற்றிவைப்பு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கார்திகேசு


வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீ உகந்தமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவ திருவிழா சிறப்பாக கடந்த மாதம் 27ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

ஆலயத்தின் இறுதி தீர்தோற்சவத்தினை சிறப்பிக்கும் விதத்தில் சைக்கிள் மார்க் நிறுவனத்தினரின் உதவியுடன் 6 அடி உயரம், 76 மி.மீற்றர் விட்டம் கொண்ட 24 மணித்தியாளயங்களுக்கு எறியக்கூடிய ஊதுபத்தி வெள்ளிக்கிழமை (08) ஏற்றிவைக்கப்பட்டது.

இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டு உகந்தை முருகன் ஆலயத்தின் வண்ணக்கர் ஸ்ரீமான் முத்துபண்டா சுரேந்திரராஜ் மற்றும் சைக்கிள் மார்க் நிறுவனத்தின் மட்டு, அம்பாறை பிராந்திய முகாமையாளர் கே.இந்திரகுமார் ஆகியோர் இதன்போது கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வினை பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X