Freelancer / 2022 ஜூலை 29 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சகா)
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் கோவிலின் வருடாந்த கொடியேற்ற நிகழ்வு, இன்று (29) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெறவுள்ளது.
அதேவேளை, உகந்தை மலை ஸ்ரீ முருகன் கோவில் கொடியேற்றமும், கோவில் பிரதமகுரு சிவசிறி க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.
கொடியேற்றம் தொடங்கி தொடர்ச்சியாக 15 நாட்கள் திருவிழாக்கள், பெரஹரா இடம்பெற்று, எதிர்வரும் 12ஆம் திகதி கதிர்காமத்தில் தீர்த்த உற்சவமும் அதேபோன்று, உகந்தை முருகன் கோவிலின் தீர்த்த உற்சவம் எதிர்வரும் 11ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன.
இது இவ்வாறு இருக்க கதிர்காமத்துக்கான காட்டுப்பாதையில் பயணிக்கும் பக்தர்கள் தொடர்ச்சியான மழையால் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம், செல்வச் சந்நிதி கோவிலில் இருந்து புறப்பட்ட குழுவினர் உள்ளிட்ட சுமார் 9,000 பாதயாத்திரை அடியார்கள் இதுவரை கதிர்காமத்தை சென்றடைந்திருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
33 minute ago
33 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
33 minute ago
1 hours ago
1 hours ago