2026 மார்ச் 14, சனிக்கிழமை

“பஞ்சபுராணம் முற்றோதல்” போட்டி

Freelancer   / 2026 மார்ச் 13 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இரத்தினபுரி மாவட்ட அறநெறிப்பாடசாலை ஒன்றியமும் இணைந்து நடாத்தும் “பஞ்சபுராணம் முற்றோதல்” போட்டியானது இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள 15 அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு இடையில் பிரிவுகளின் அடிப்படையில் நடைபெறவுள்ளது.

இ/எம்பி/பரியோவான் ஆரம்பப்பிரிவு பாடசாலையில் 14ஆம் திகதி (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு, பாலர்ப்பிரிவு, கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு, மேல் பிரிவு என்ற அடிப்படையில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதற்கான பூரண அனுசரணையை Vijay Electrical உரிமையாளர் திரு அர்ஜூணன் விஜயகுமார் வழங்குகின்றார்.

ஒரு பிரிவில் இருந்து 5 மாணவர்கள் அடங்களாக 4 பிரிவுகளில் இருந்தும் ஒரு அறநெறிப்பாடசாலையில் 20 மாணவர்கள் போட்டிகளில் பங்குபெறுகின்றார்கள். மொத்தமாக 300 மாணவர்கள் இப்போட்டிகளில் பங்குபெற்ற உள்ளார்கள்.

பிரிவுகளின் அடிப்படையில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. 

முதல் பரிசு - 10,000 ரூபாய்.
இரண்டாம் பரிசு  -  7,000 ரூபாய்.
மூன்றாம் பரிசு  -  5,000 ரூபாய்.

மேலும் மாணவர்களுக்கு பதக்கங்கள் அணிவித்து சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X