2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலய பிரமோற்சவம்

Thipaan   / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம்

கிழக்கின் சின்னக் கதிர்காமம் எனப்போற்றப்படும் திருகோணமலை மாவட்ட எல்லையின் மகாவலி கங்கைக் கரையில் அமைந்துள்ள அருள்மிகு  வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலய 18 நாள் கொண்ட பிரமோற்சவம் 03ஆம் திகதி சனிக்கிழமையன்று ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

நேற்றய தினம் சம்பூர் மக்களின்  உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இது, இம்மக்கள் மீழக்குடியமர்த்தப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற உற்சவமாகும்.

இவ்வுற்சவத்தை ஒட்டிய  வேல்நடைபஜனை மூதூரில் இருந்தும் அம்பாறையில் இருந்தும் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

ஆலயத்தின் இராஜகோபுர பணியும் நிறைவடைந்து, கடந்த வாரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X