Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2018 ஜனவரி 01 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொட்டு கட்சியில் ஆசன ஒதுக்கீடு தொடர்பில், அண்மையில் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. அதில் ‘குண’மானவருக்கும் ‘உதய’மானவருக்கும் இடையில் சிறு முறுகல் ஏற்பட்டுள்ளது.
ஆசன ஒதுக்கீட்டில் தமது தரப்பினருக்கு உரிய இடம் வழங்கப்படவில்லை எனக் குற்றம் சுமத்திய ‘உதய’மானவர், கடும் கோபத்தில் சில வார்த்தைகளைப் பேசியிருக்கிறார். அதைக் கேட்ட ‘குண’மானவருக்கு பெருங்கோபம் உண்டாயிற்றாம். இது வேலைக்கு ஆகாது எனக் கூறி எழுந்துவிட்டாராம்.
ஆனாலும் அருகிலிருந்த பலர், அவரை சமாதானப்படுத்தி மீண்டும் அமரச் செய்துள்ளனர்.
அதன்பின்னர் ‘குண’மானவர் அமைதியாக யோசித்துக்கொண்டிருந்தாராம்.
சற்று நேரம் சென்றவுடன் அவருக்கு அருகில் சென்ற ‘உதய’மானவர், “நான் ஏதும் தவறாக, மனம் புண்படும்படி பேசியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் சேர்…” எனப் பவ்வியமாக மன்னிப்புக் கேட்டிருக்கிறார். அதன் பின்னர் இருவரும் சமாதானமாகிக் கொண்டனர்.
சரி… இந்த இருவரின் உறவில் அப்படியென்ன இருக்கிறது என்று பார்த்தால், திரைக்குப் பின்னாலும் ஒரு கதையும் உண்டு.
அதாவது, ‘குண’மானவர், நாடாளுமன்றுக்கு தெரிவாவதற்கு முன்னர் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளமை நாம் அறிந்ததே. அவரிடம் வரலாறு பாடம் கற்ற மாணவர் தான் ‘உதய’மானவர் எனப் பலர் கதைத்துக்கொண்டனர்.
இங்கே மன்னிப்புக் கேட்டதில், குரு – சிஷ்ய உறவின் பின்புலமும் உண்டு.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
30 Apr 2025
30 Apr 2025