2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

கிழித்தெறியப்பட்ட இராஜினாமா கடிதம்

Editorial   / 2019 ஜூலை 31 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்குக் கூட்டணியின் ​சிரேஷ்டர் ஒருவர், தான் வகிக்கும் கட்சியின் உயர் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளாராம்.

இதற்கு, கூட்டணியின் தலைமைக் கதிரையில் அமர்வதற்கு, புதிய எம்.பி ஒருவர் எடுத்துவரும் முயற்சியே காரணமெனக் கூறப்படுகிறது. ராஜாவான இவர், கட்சியின் இரண்டாவது தலைமையை வகிப்பதாகவே, தகவலறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

புதிய நடிகர்கள் காரணமாக அவருக்கு ஏற்பட்ட விரக்தி காரணமாகவே, தன்னுடைய பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாகக் கூறி, கட்சியின் தலைவருக்கு, நீண்ட கடிதமொன்றை எழுதியுள்ளார். அதில், தனது மனதி வெடித்துக்கொண்டிருக்கும் விடயங்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் போ​வதென்ற முடிவில் தான், அவர் இந்தக் கடிதத்தைக் கையளித்துள்ளார். எவ்வாறாயினும், அவருடைய கடிதத்தை வாசித்த பெரியவர், இவர் பைத்தியக்கார வேலை செய்யப் பார்க்கிறார் என்று, அந்தக் கடிதத்தைக் கிழித்து வீசினாராம்.

தன்னுடைய, பதவி விலகலை, கட்சித் தலைவர் ஏற்றுக்கொள்ளாததால், போக வழியின்றி வருத்தத்துடன் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X