2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

’சிந்தித்து நடந்துகொள்ளுங்கள்’

Editorial   / 2017 நவம்பர் 12 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் பெற்றோல் பிரச்சினை ஒருவாறு தீர்ந்திருக்கிறது. அது, பாரிய பிரச்சினையாக உருவெடுத்த ​வேளை, அதற்குப் பொறுப்பான அமைச்சர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தனவாம். அது குறித்து முக்கியமான புள்ளிகள் பலரும் ஜனாதிபதியிடம் முறையிட்டிருக்கிறார்கள்.

அவர் கிரிக்கெட் அணியை வழிநடத்தச் சிறந்தவர், ஆனாலும் அமைச்சுப் பதவியில் ​அவர் அதிகாரத்துடன் செயற்படத் தவறுவதாகவும் கூறியிருக்கிறார்கள்.

அந்த வேளையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரை உடனடியாக சந்திக்க வேண்டும் என அழைத்திருக்கிறார். 

”இது எந்தளவு பாரிய பிரச்சினை என்பதை அமைச்சராகிய நீங்கள் உணர வேண்டும். ஆட்சி மாற்றம் நிகழக் கூடிய அளவுக்கு இது ஆபத்தான நிலைமையாகும். தயவு செய்து சிந்தித்து நடந்துகொள்ளுங்கள். உடனடியாக பிரச்சினைக்குத் தீர்வு காணாவிட்டால் என்ன நடக்கும் என்பதைப் பாரத்துக்கொள்ளுங்கள்” என ஜனாதிபதி அதிரடியாகப் பேசியிருக்கிறார்.

பதில் பேச முடியாமல் அமைதியாகச் சென்றாராம் அமைச்சர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .