2023 ஒக்டோபர் 03, செவ்வாய்க்கிழமை

வீட்டிலேயே கடமை பொறுப்பேற்றத் தலைவர்

Menaka Mookandi   / 2018 மே 16 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சரவை அமைச்சுப் பொறுப்​பொன்று கிடைத்த போதிலும், அதில் சந்தோஷப்படாத அமைச்சரொருவர் இருக்கின்றாராம். மணலில் சேறு கலந்தப் பி​ரதேசத்தைச் சேர்ந்த அவ்வமைச்சருக்கு, முதலாவது அமைச்சரவை மாற்றத்தின் போது, காட்டுப் பொறுப்பு கையளிக்கப்பட்ட நிலையில், அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது, தொழிலாளர் விவகாரம் கையளிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர், அப்செட்டாகி உள்ளாராம்.

காடு, வனவிலங்குகள் கிடைத்ததும், புதிதாக நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புகளை வழங்குவதற்குத் திட்டமிட்டிருந்த நிலையில், திடீரென தனது அமைச்சுப் பொறுப்பு மாற்றப்பட்டுள்ளதால், அந்த அமைச்சர் குழம்பிப்போய் உள்ளாராம். அத்துடன், கட்சியின் சிரேஷ்டரான தனது அமைச்சை, பொனிக்கு வழங்கியமை தொடர்பில், அரசியல் தலைமைகளிடம் கூறி ஆதங்கப்பட்டும் வருகிறாராம்.

அப்போது, “கட்சி என்பது மரம். அதன் உச்சி தான் நீங்கள். புதியவர்கள் அனைவரும், அந்த மரத்தின் இலைகள். அந்த இலைகள், கொஞ்ச காலத்துக்குத் தான் இருக்கும். அதனால், உங்களுக்கு வழங்கிய தொழிலாளர் விவகாரத்தை, சந்தோஷமாகவும் பிரயோசனமாகவும் செய்துகொண்டு இருங்கள்” என்று, உயரிடங்களிலிருந்து அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாம்.

எவ்வாறாயிகும், இந்தப் பதிலால் திருப்திகொள்ளாத அமைச்ர், தனக்கு வழங்கப்பட்ட புதிய அமைச்சின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவும் செல்லவில்லையாம். கடமை பொறுப்பேற்கும் கடிதத்தைத் தயாரித்து, வீட்டுக்கு அனுப்பிவைக்குமாறு கூறியுள்ள அமைச்சர், வெலிமடையிலுள்ள தனது வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.

அமைச்சரின் கடிதத்தைத் தயாரித்த அதிகாரிகள், அதை ​ஃபைல் ஒன்றில் இட்டு, கொழும்பிலிருந்து வெலிமடைக்குச் செல்லும் பஸ் ஒன்றின் ஊடாக அனுப்பி வைத்தார்களாம். பஸ்ஸில் வந்த கடமை பொறுப்பேற்கும் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட அமைச்சர், வீட்டில் இருந்துகொண்டே, அமைச்சின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டாராம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .