Editorial / 2019 பெப்ரவரி 14 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

கடந்த சுதந்திர தினத்தன்று மாலை, கொழும்பை அண்மித்த வீடொன்றில், சுதந்திரத்துக்கான விருந்துபசார நிகழ்வொன்று இடம்பெற்றது. எதிர்க்கட்சினரால் முன்னெடுக்கப்பட்ட பிரபல அரசியல் சதித் திட்டங்கள், இந்த அரசியல்வாதியின் வீட்டில் தான் பெரும்பாலும் திட்டமிடப்பட்டிருந்தன.
ஆனால், அன்றை விருந்துபசாரத்தின் போது, வழமையாகக் காணக்கூடியவர்களை விட, வித்தியாசமானவர்கள் காணப்பட்டனர். கடந்த அரசாங்கத்தின் தலைவரோடு, அண்ணன் தம்பியாக இருந்த அரசியல்வாதியொருவர், பக்கம் தாவினாற்போல, இந்த விருந்துபசாரத்தில் என்ன செய்கிறார் என்று, பலரும் முனுமுனுக்கத் தொடங்கினர். சிலர், மொட்டு மலர முன்னர், கதிரையில் அமர ஆசைப்படுகிறாரோ என்றும் பேசலாகினர். மேலும் சிலர், மொட்டு மலர முன்னர், கையைப் பற்றிக்கொள்ள எண்ணுகிறார் போலும் என்றனர்.
எது எவ்வாறாயினும், விருந்துபசாரத்தில் நடந்ததெல்லாம், விஜேராமைக்கு தகவல் போனதாம். அதன் பின்னர் முன்னால் தலைவருக்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ள விஜேராம தலைவர், அரசியல் தராசை சமப்படுத்த எண்ணும் இந்த வாயாடி அரசியல்வாதியுடன் நேரடியாகப் பேசி, இரண்டில் ஒரு முடிவை எடுக்குமாறு கூறினாராம்.
35 minute ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
19 Nov 2025