2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

பதவி துறந்த விதம்

Editorial   / 2017 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டு அலுவல்களுக்குப் பொறுப்பாகவிருந்த அமைச்சரின் இராஜினாமாவின் பின்னணியில் நடந்த விடயங்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

அந்த அமைச்சர், யார் என்ன சொன்னாலும் பதவியிலிருந்து விலகப் போவதில்லை என ஐ.தே.க.வின் இரண்டாம் நிலை உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார். அத்துடன் தனக்கு நெருங்கிய நண்பர்களை வீட்டுக்கு அழைத்து, தனது நிலைப்பாட்டை குறிப்பிட்டுள்ளதுடன் ஆலோசனைகளையும் கேட்டுள்ளார்.

இந்த விடயம் எப்படியோ மேலிடத்துக்கு கசிந்திருக்கிறது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய பெண்மணியொருவர் மேலிடத்தின் சிபாரிசின் பேரில் அந்த அமைச்சரது வீட்டுக்கு சென்றிருக்கிறார்.

மேலிடத்திலிருந்து செய்தியொன்றை எடுத்து வந்ததாகச் சொல்லிய அந்தப் பெண்மணி, இராஜினாமா செய்யுங்கள், அல்லது பதவி பறிக்கப்படும் என்ற எச்சரிக்கையையும் விடுத்திருக்கிறார்.

அதன்பின்னர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர், இராஜினாமா செய்வதற்கு சம்மதம் வெளியிட்டிருக்கிறார்.

அவருடன் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கும் “இளம்” பெண்மணியொருவர் தான் தூதுவராக செயற்பட்டிருக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .