2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

அரச இரகசியத்தைக் காக்கத் தெரியாத அதிகாரி

Menaka Mookandi   / 2018 டிசெம்பர் 13 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் தேசியப் பாதுகாப்பு தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து, இந்நாட்டுத் தலைவர் தலைமையில், அண்மையில் கூட்டமொன்று நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்துக்கு, முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் ​தலைவர், நாட்டின் பிரதான செயலாளர்கள் என்போர் கலந்துகொள்வது கட்டாயம்.

இப்படியாக இந்தக் கூட்டத்தைக் கூட்டும் போது, இந்தக் கூட்டத்தைக் கூட்டிய செயலாளருக்கு உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டதாம். இந்தக் கூட்டத்தைக் கூட்டினால் பரவாயில்லை, ஆனால், அந்த மனுசனை மாத்திரம் அந்தப் பக்கம் கூட வரவழைக்கக் கூடாதென்று உத்தரவிடப்பட்டதாம்.

இறுதியில், அழைக்கப்படக் கூடாதெனத் தெரிவிக்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரி யாரென, செயலாளர் தேடத் தொடங்கினாராம். பார்த்தால், ஒரு பாதுகாப்புத் திணைக்களமொன்றின் தலைவரைத் தான் அழைக்க வேண்டாமென்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதென, செயலாளர் கண்டறிந்துகொண்டாராம். இறுதியில், அந்த உயரதிகாரிக்குப் பதிலாக, அவருக்கு அடுத்ததாக உள்ள இருவரே, இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டார்களாம்.

அரச பாதுகாப்புகளைக் காக்கத் தெரியா​தவரென்ற காரணத்தாலேயே, மேற்படி திணைக்களத் தலைவருக்கு, இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாம். இலங்கை வரலாற்றில் முதன் முறையாக, காக்கிச்சட்டைப் பெரியவரின்றி, ஏனைய சிரேஷ்டர்களது தலைமையில், இந்தப் பாதுகாப்புக் கூட்டம் நடத்தப்பட்டதாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .