2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

சில கதைகள், பல இரகசியங்கள்!

Editorial   / 2017 ஒக்டோபர் 01 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலை வளாகத்தில் நடைபெற்ற சுவாரஷ்யமான சம்பவம் குறித்து இப்போது தகவல் கசிந்திருக்கிறது. முன்னாள் தலைவர், சிற்றுண்டிச்சாலையில் தனக்கு நெருக்கமான சகாக்களுடன் சுவாரஷ்யமாகக் கதைத்துக்கொண்டிருந்துள்ளார்.

அந்த வேளையில் அங்கு வந்த தேர்தல்களுக்குப் பொறுப்பான அமைச்சர் ஒருவர், முன்னாள் தலைவரிடம் ஏதோ சில விடயங்களைக் கலந்துரையாடியிருக்கிறார். இதை, சற்றுத் தொலைவில் இருந்து மலைநாட்டு சேவல் தலைவர் பார்த்துக்கொண்டிருந்தாராம்.

தேர்தல் அமைச்சர் அவ்விடத்திலிருந்து சென்றவுடன், முன்னாள் தலைவரிடம் மெதுவாக நெருக்கமாகிப் பேசியிருக்கிறார் அந்த சேவல் தலைவர்.

“என்னவாம் சேர்? அவர் என்ன சொல்கிறார்? அவரிடம் கவனமாக இருங்கள். எனக்குச் செய்த செயலைப்போலவே உங்களுக்குச் செய்தாலும் ஆச்சரியமில்லை” என்றாராம் அவர்.

அதற்கு, முன்னாள் தலைவர் “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?” எனக் கேட்டாராம்.

“என்ன சேர் உங்களுக்குத் தெரியாதா? அவர் என்னுடைய கட்சியிலிருந்துதான் அரசியலுக்கு வந்தார். பின்னர் உங்களோடு இருந்தார். இப்போது வேறு இடத்தில், அதாவது இங்கே இருக்கிறார். அவருக்கு உயரிடத்திலிருந்து அவ்வளவு சாதகமான ஆதரவு கிடைப்பதில்லையாம். படகும் அங்குமிங்கும் அசைவதாக நாம் அறிகிறோம் தானே? அதனால்தான் உங்களை நினைவு வந்திருக்கிறது போல. அதைத்தான் நினைவூட்டினேன்” என மூச்சுவிடாமல் சொல்லி முடித்தாராம் சேவல் தலைவர்.

அதைக்கேட்ட முன்னாள் தலைவர், வாய்விட்டுச் சிரித்தாராம். தலைவர்கள் எங்கெங்கெல்லாம் கண் வைத்துக்கொண்டிருக்கிறார்கள் பாருங்கள்! சில கதைகளில் பல இரகசியங்கள் உண்டு என இதனை நேரில் கண்டோர் சொல்லிக்கொண்டனராம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .