Freelancer / 2023 செப்டெம்பர் 19 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1916 : முதலாம் உலகப் போர் - கிழக்கு ஆப்பிரிக்க நடவடிக்கையில், பெல்ஜிய கொங்கோவின் குடியேற்றப் படைகள் டபோரா நகரைப் பெரும் சண்டையின் பின் கைப்பற்றின.
1944 : இரண்டாம் உலகப் போர் - ஊர்ட்கென் காடு சண்டை ஆரம்பமானது.
1944 : பின்லாந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.
1952 : ஐக்கிய அமெரிக்கா இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்ட சார்லி சாப்ளின் நாடு திரும்புவதற்கு அமெரிக்க அரசு தடை விதித்தது.
1957 : ஐக்கிய அமெரிக்கா நிலத்துக்கடியே தனது முதலாவது அணுகுண்டு சோதனையை நடத்தியது.
1970 : கிரேக்க சர்வாதிகாரி ஜியார்ஜியசு பப்படபவுலசின் ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிரேக்க மாணவர் ஒருவர் தீக்குளித்து மாண்டார்.
1976 : தெற்கு துருக்கியில் போயிங் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில், 155 பேர் அனைவரும் கொல்லப்பட்டனர்.
1978 : சொலமன் தீவுகள் ஐநாவில் இணைந்தது.
1983 : செயிண்ட் கிட்சும் நெவிசும், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1985 : மெக்சிகோ நகரில் இடம்பெற்ற 7.8 ரிக்டர் நிலநடுக்கத்தினால் குறைந்தது 9,000 பேர் உயிரிழந்தனர்.
1989 : நைஜரில் பிரெஞ்சு யூடிஏ விமானத்தில் குண்டு வெடித்ததில், 171 பேர் கொல்லப்பட்டனர்.
1991 : ஏட்சி பனிமனிதன் இத்தாலிக்கும் ஆத்திரியாவுக்கும் இடையில் ஆல்ப்சு மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டான்.
1997 : அல்ஜீரியாவில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் 53 கிராம மக்களைப் படுகொலை செய்தனர்.
2006 : தாய்லாந்தில் இராணுவப் புரட்சியில் இராணுவத் தளபதி சோந்தி பூன்யா ரத்கிலின் ஆட்சியைக் கைப்பற்றினார்.
2017 : மெக்சிக்கோவில் நடுப் பகுதியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில், 370 பேர் உயிரிழந்தனர்.
28 minute ago
51 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
51 minute ago
54 minute ago