Editorial / 2021 ஏப்ரல் 25 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1916: அன்சாக் நாள், முதல் தடவையாக நினைவு கூரப்பட்டது.
1945: இரண்டாம் உலகப் போர் - ஜேர்மனியின் ஆக்கிரமிப்பு இராணுவம், வடக்கு இத்தாலியில் இருந்து விலகியது. பெனிட்டோ முசோலினி, கைது செய்யப்பட்டார்.
1945: இரண்டாம் உலகப் போர் - கடைசி நாட்சிப் படையினர், பின்லாந்தில் இருந்து விலகினர்.
1954: முதலாவது செயல்முறை சூரிய மின்கலம், பெல் ஆய்வுகூடத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
1974: போர்த்துக்கலில், 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சிசெய்த பாசிச அரசு கவிழ்க்கப்பட்டு, மக்களாட்சி ஏற்படுத்தப்பட்டது.
1981: சப்பானின் சுருகா அணுமின் நிலையத்தில், நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள், கதிர்வீச்சுத் தாக்கத்துக்கு உள்ளாயிகினர்.
1982: காம்ப் டேவிட் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இஸ்ரேலியப் படைகள் முழுவதுமாக, சினாய் தீபகற்பத்தில் இருந்து வெளியேறியன.
1983: பயணியர் 10 விண்கலம், புளூட்டோ கோளின் சுற்றுப்பாதையைத் தாண்டிச் சென்றது.
1988: இரண்டாம் உலகப் போரில் இழைத்த போர்க்குற்றங்களுக்காக, ஜோன் டெம்ஜானுக் என்பவருக்கு, இஸ்ரேல், மரண தண்டனை விதித்தது.
2005: இத்தாலிய ஆக்கிரமிப்பாளர்களால், 1937இல் களவாடப்பட்ட 1700 ஆண்டுகள் பழமையான சதுர நினைவுத்தூபியின் கடைசித் துண்டு, எத்தியோப்பியாவுக்குக் கொண்டுவரப்பட்டது.
2005: பல்கேரியா, ருமேனியா என்பன, ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன.

2006: கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில், இராணுவத் தளபதி சரத் பொன்சேகா படுகாயமடைந்ததுடன், இராணுவத்தினர் ஐவர் உயிரிழந்தனர்.
2015: நேபாளத்தில் ஏற்பட்ட 7.8 ரிஷ்டர் அளவு நிலநடுக்கத்தால், 9,100 பேர் உயிரிழந்தனர்.
2 hours ago
8 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
16 Jan 2026