2021 ஜூன் 21, திங்கட்கிழமை

வரலாற்றில் இன்று: ஏப்ரல் 26

Editorial   / 2021 ஏப்ரல் 26 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1942: சீனாவில் இடம்பெற்ற சுரங்க விபத்தொன்றில், 1549 பேர் உயிரிழந்தனர்.

1956: உலகின் முதலாவது கொள்கலன் கபப்லான எஸ்.எஸ். ஐடெக்ஸ் எக்ஸ், அமெரிக்காவின் நியூஜேர்ஸி நகர துறைமுகத்திலிருந்து புறப்பட்டது.

1960: ஏப்ரல் புரட்சியின் காரணமாக, தென்கொரிய ஜனாதிபதி சிங்மன் றீ ராஜினாமா செய்தார்.

1962: நாஸாவின் ரேஞ்சர் -4 விண்கலம் சந்திரனின் மீது மோதியது.

1963: லிபியாவில் அரசியலமைப்பு திருதத்தப்பட்டது. பெண்களும் தேர்தலில் பங்குபற்ற அனுமதிக்கப்பட்டனர்.

1964: தான்கானிகா மற்றும் ஸான்ஸிபார் நாடுகள் ஒன்றிணைந்து தான்ஸானியா நாடு உருவாக்கப்பட்டது,

1986: சோவியத் யூனியனின் செர்னோபில் அணுஉலையில் பாரிய வெடிப்பு ஏற்பட்டது. உலகின் மிக மோசமான அணுஉலை விபத்து இதுவாகும்.

1977: தந்தை செல்வா காலமானார்.

1981: மட்டக்களப்பு, பட்டித்திடல் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 16 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1982: தென் கொரியாவில் முன்னாள் காவல்துறையினன் ஒருவன் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதில் 57 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

1986: உக்ரைனில் செர்னோபில் அணுமின் உலையில் பெரும் விபத்து ஏற்பட்டது. உலகின் மிகப்பெரும் அணுவுலை விபத்து இதுவாகும்.

1989: பங்களாதேஷில் டோர்னடோ சுழல்காற்றின் காரணமாக 1300 பேர் பலியாகினர்.

1994: சீன விமானமொன்று ஜப்பானில் விபத்துக்குள்ளானதால் 271 பயணிகளில் 264 பேர் பலியாகினர்.

1994: உச்சி குவார்க் (Top Quark) உபஅணுத் துணிக்கை ஒன்றைத் தாம் அவதானித்ததாக இயற்பியலாளர்கள் அறிவித்தனர்.

2005: 29 ஆண்டுகால இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின்னர் சிரியா தனது 14,000 இராணுவத்தினரை லெபனானில் இருந்து முற்றாக விலக்கிக் கொண்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .